முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில் குமார்
முதுகுளத்தூரில் திமுக பொதுக்கூட்டம் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.பங்கேற்பு
முதுகுளத்தூர் பிப்-26
முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரே முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி அளவிளான திமுக பொதுக்கூட்டத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். பொதுக்கூட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட திமுக கழக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.
மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி பரமக்குடி எம் எல்ர முருகேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய ஒன்றிய செயலாளர் கோவிந்தன் அனைவரையும் வரவேற்றார்.
அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசும்போது முதுகுளத்தூர் தொகுதியில் செய்துள்ள பணிகளை பட்டியலி ட்டார். வரும் காலத்தில் பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்படும் என்றார். தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி.பேசியதாவது:. சென்னையில் பள்ளிச் சிறுமியிடம் சாப்பிட்டியா என கேட்ட போது சாப்பிட வில்லை என குழந்தை கூறியதைக் கேட்டுத்தான் காலை உணவுத்திட்டத்தை கொண்டு வந்தார்
இந்த காலை உணவு திட்டம் கனடா நாட்டில் பின்பற்றப்படுகிறது. தாயுள்ளம் கொண்ட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். பெண்கள் தினந்தோறும் பணியாரம் சுட்டுக்கொண்டிருந்தோம். அப்படிப்பட்ட பெண்களை சிங்கப் பெண்களாக மாற்றி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துடாகடராகம், இஞ்சினியராகவும் உயர்த்தி சிங்கப் பெண்களாக உயர்த்தினார்…
தமிழ்நாடு கல்வியில் முன்னிலையில் உள்ளது. மகளிர்விடியல் பயணம் மூலம் பெண்களுக்கு மாதம் 800 ரூபாய்-சேமிப்பு ஏற்பட்டுள்ளது இவ்வாறு பேசினார். பொதுக்கூட்டத்தில் முதுகுளத்தூர் பேரூராட்சி சேர்மனி ஏ.ஷாஜஹான், முன்னாள் எம்எல்ஏ முருகவேல், ஒன்றிய செயலாளர்கள் கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், முன்னாள் சேர்மன் கருப்பையா பூபதி மணி, ஆப்பனூர் ஆறுமுகவேல் சண்முகம் ஹரி, தூவல் அழகர்.வி.சேகர், செல்லமணி, உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.