திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பேரூராட்சியில் நடைபெற்ற மன்ற கூட்டத்தில் 14-வது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் பழனியாண்டவர் தனது பகுதிக்கு கடந்த 4 ஆண்டுகளாக எந்த திட்ட பணிகளும் நிறைவேற்றப்படவில்லை என்றும் இது குறித்து புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது தனக்கு வழங்கப்பட்ட தீர்மான நகலை அனைத்து உறுப்பினர்கள் முன்னிலையில் கிழித்து எரிந்தார் அவருக்கு ஆதரவாக திமுகவை சேர்ந்த மற்றொரு உறுப்பினரும் தனது வார்டு பகுதிக்கு எதுவும் செய்யவில்லை என பேரூராட்சி செயல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.