கோவை மாவட்டம் ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி அன்று பல்வேறு பூஜைகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இது குறித்து பல்வேறு திராவிட கழகம்,கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தை போன்ற கட்சியை சேர்ந்த பலர் பூஜைகள் குறித்து சமூக வலைதளங்களில் தவறாகவும், இழிவாக வீடியோ வெளியிட்டு வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா பொதுச் செயலாளர் பிரேம் சேதுபதி மற்றும் அமைப்பைச் சார்ந்தவர்கள் கோவை மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

மேலும் பேராசிரியர் காமராஜ் தனது தனிப்பட்ட குடும்ப விகாரத்தை பயன்படுத்தி ஈஷா யோக மையம் இது தொடர்ந்து தவறான தகவல்களை கூறி வரும் நிலையில் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

அதுமட்டுமில்லாமல் ஈஷா யோகா மையத்தின் மீது பொய்யான, போலியான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சைபர் குற்றப்பிரிவின் மூலம் சமூக வலைதளங்களில் உள்ள அவதூறு பதிவுகளை ஆய்வு செய்து டிஜிட்டல் ஆதாரங்களை பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *