தனியார் தொழிற்சாலையில் மெத்தனால் எத்தனால் உள்ளதா
என போலீசார் ஆய்வு.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சுற்று பகுதியில் தனியார் தொழிற்சாலையில் மெத்தனால் எத்தனால் உள்ளதா என மதுராந்தகம் மதுவிலக்கு அமல் பிரிவு
போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுராந்தகம் அருகே கீழவலம் பகுதியில் இயங்கும் தனியார் தொழிற்சாலைகளில்
மதுராந்தகம் மது விலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் முருகன்
மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் முத்துக்குமார்
மத்திய நுண்ணறிவு பிரிவு செங்கல்பட்டு மாவட்ட தலைமை காவலர் திருமுகம்
உள்ளிட்ட போலீசார் இணைந்து மதுராந்தகம் சுற்றுப்பகுதிகளான
கீழவலம் மற்றும் சாத்தமை பகுதிகளில் இயங்கும் தனியார் தொழிற்சாலைகளில்
எத்தனால் மற்றும் மெத்தனால் வேதிப் பொருட்கள் விற்பனை
செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.