கவுண்டன்பட்டி பேரூராட்சி மன்ற துணை தலைவர் தீவிர தேர்தல் பரப்புரை தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற பொது தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படாத நிலையிலும் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்
இதன்படி தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள வீரபாண்டியில் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என். இராமகிருஷ்ணன் எம் எல் ஏ உத்தரவின் பேரில் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி மன்ற துணை தலைவர் கஸ்தூரி பாஸ்கரன் தலைமையில் மகளிர் அணி திமுகவினர் காமய கவுண்டன்பட்டி அனைத்து பகுதிகளில் உள்ள தெருக்களில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பெண்களிடம் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் தமிழக அரசின் நலத் திட்டங்கள் குறித்த விளக்கி கூறியும் தமிழ் பெண்கள் வெல்லட்டும் என்ற புத்தகங்கள் வழங்கி தீவிர பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் கம்பம் ஒன்றிய மகளிர் அணி திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.