தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
மூலனூர் அருகே கோரமாக முடிந்த குடும்ப தகராறு: பெற்ற தாயின் கழுத்தை மது போதையில் அறுத்து கொலை செய்த மகன் மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் மாலமேடு பகுதியில் உள்ள பெருமாள் வலசு கிறிஸ்டின் தெருவைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 60). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். அதன் பிறகு இவர் தனது மகன் ராஜகோபால் (வயது 40) என்பவருடன் வசித்து வந்தார். ராஜகோபால் கொத்தனார் வேலை செய்து வருபவராகும்.
கடந்த சில மாதங்களாகவே ராஜகோபால் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தாயிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர். இன்று இரவு இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் உச்சத்துக்குச் சென்று, ராஜகோபால் தன்னுடைய தாயான மாரியம்மாளின் கழுத்தை கத்தியால் கிழித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மூலனூர் போலீசார, மாரியம்மாளின் சடலத்தை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கொலை சம்பந்தமாக ராஜகோபாலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபோதைய குடிப்பழக்கம் மற்றும் அதனால் ஏற்படும் குடும்பக் கலகங்கள் எவ்வளவு விபரீதமான முடிவுகளுக்குக் காரணமாகின்றன என்பதற்கான ஒரு வேதனையூட்டும் உதாரணமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.