சகாதேவன் செய்தியாளர் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் சமூக சேவகர். திருப்பதி இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் சென்று பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு உயர்கல் பயில ஆலோசனை வழங்கி வருகிறார் அதன் வகையில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், செய்யூர் கிராமத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய, மாணவர்கள் கல்வி உதவித் தொகையுடன் உயர் கல்வி பயில விழிப்புணர்வு வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர், கல்வியாளர்,மு. திருப்பதி, சமூக சேவகர் நா. வேணுகோபால், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், மெய்யூர் குமாரவேல், நிகழ்ச்சி ஏற்பட்டாளர் ராஜா, கிருஷ்ணன் தலைமை ஆசிரியர் ஓய்வு, லட்சுமணன் முன்னாள் ராணுவம் ஓய்வு, மாணவர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.