கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டி தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி சிக் ஷனா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி பல்கலைக்கழகம் இணைந்து விசானா ந்தம் உத்சேவ் 2026 என்ற தலைப்பில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டி நடைபெற்றது
இந்த போட்டியில் மருத்துவம் பொறியியல் செவிலியர் கல்வியியல் ஆசிரியர் பயிற்சி கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி என பல்வேறு கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன இந்த நிகழ்ச்சியில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு கேடயமும் நற்சான்றிதழும் வழங்கப்பட்டன
ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகா சமஸ்தான மடத்தின் பீடாதிபதி பூஜ்யஸ்ரீ ஜெகத்குரு டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நிர்மலாந்தநாத மகா சுவாமிஜி அவர்களிடமிருந்து கல்லூரி இணைச் செயலாளர் என் எம் ஆர் வசந்தன் கல்லூரி இணைச் செயலாளர் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா கல்லூரி துணை முதல்வர் டாக்டர் வி. வாணி மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் மாணவிகள் இணைந்து அவர்களிடம் வாழ்த்து பெற்றனர் கல்லூரி திருவள்ளுவர் மின்னியல் நூலகர் என் ராஜலட்சுமி நன்றி கூறினார்