வலங்கைமானில் அதிமுக வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ் கலந்து கொண்டார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் குடவாசல் மெயின் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகள் மற்றும் வலங்கைமான் பேரூராட்சி உள்பட்ட 98 வாக்குச்சாவடிகளின் முகவர்களை நேரில் சந்தித்து அதிமுக சார்பில் கள ஆய்வு செய்தனர்.
ஒரு பூத்துக்கு 9 முகவர்கள் என்கிற அடிப்படையில் 6 ஆண்கள், 3 பெண்கள் வீதம் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கள ஆய்வு செய்த திருவாரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் மற்றும் திருவாரூர் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் இளவரசன் ஆகியோருடன் ஒவ்வொரு பூத்துகள் வாரியாக 98 பூத்துகளைச் சார்ந்த பெண்கள் உள்ளிட்ட 882 முகவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றியக்குழு தலைவருமான குமாரமங்கலம் கே. சங்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் யூ. இளவரசன், வலங்கைமான் நகர செயலாளர் சா. குணசேகரன், மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலாளரும், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான மாஸ்டர் எஸ். ஜெயபால், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஜெய.இளங்கோவன், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.மூர்த்தி, ஆர்.ஜி. பாலா, தொழவூர் முனுசாமி, நகர அவைத் தலைவர் ரத்னகுமார், பொருளாளர் விஸ்வநாதன், அம்மன் எடை மிஷன் ஜி. பாலகிருஷ்ணன், மற்றும் ராஜா, மோகன் உள்ளிட்ட வார்டு செயலாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள், பெண்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.