தேனி தாலுகாவில் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தேனி மாவட்டம் தேனி தாலுகாவில் நாளை 18.06.2025 நான் கிழமை காலை 9 மணி முதல் 19.06.2025 வியாழக்கிழமை காலை 9 மணி வரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனைத்துத் துறை அலுவலர்களுடன் அந்தப் பகுதியில் தங்கி அரசின் சேவைகள் திட்டங்கள் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றினை கள் ஆய்வு கள் ஆய்வு மேற்கொள்ளும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற உள்ளது
எனவே இந்த முகாமில் தேனி தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை பட்டா மாறுதல் முதியோர் உதவித்தொகை கோருதல் புதிய ரேஷன் கார்டு கோருதல் விபத்து நிவாரணம் ஆதி திராவிடர் நலத்துறை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விவசாயத்துறை மற்றும் இதர துறைகள் தொடர்பாக நாளை 18.06.2025 புதன்கிழமை அன்று மாலை 4.30 மணி முதல் 06.00 மணி வரை தேனி தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்றுள்ள மாவட்ட கலெக்டர் அவர்களை நேரில் சந்தித்து பொதுமக்கள் மனுவினைக் கொடுத்து பயன்பெற்றுக் கொள்ளலாம்
மேலும் பட்டா மாறுதல் மனுக்கள் தொடர்பாக தேனி தாலுகா அலுவலகத்தில் இ.சேவை மையத்தின் மூலம் பதிவு செய்தவற்க்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
இந்த முகாமினை தேனி தாலுகா மக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்