குண்டடம் வட்டாரம் பொது சுகாதாரத் துறை சார்பாக குண்டடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாமில் தாராபுரம் அரசு மருத்துவமனை சார்பிலான ரத்த வங்கியிலிருந்து மருத்துவ அலுவலர் தலைமையிலான குழுவினர் பங்கேற்று ரத்தங்களை சேகரித்தனர். முகாமின் போது மொத்தம் 38 யூனிட் ரத்தம் கொடையாளிகளின் மூலம் சேகரிக்கப்பட்டது.
அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். மேலும், பெஸ்ட் மில், பிருத்திவி, எஸ்.கே.டி மில், வெங்கடேஸ்வரா உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களும் முகாமில் பங்கேற்று ரத்தக்கொடை வழங்கினர்.
இந்த முகாம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஸ்ரீ சுகு தலைமையில் நடைபெற்றது. சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்தனர்.
முகாமில் ரத்ததானம் செய்த அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சமூக நலனுக்காக முன்வந்து ரத்ததானம் செய்த தன்னார்வலர்களை அதிகாரிகள் பாராட்டினர். இந்த ரத்ததான முகாம் சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் சிறந்த முயற்சியாக அமைந்தது.