திருவொற்றியூர் சுனாமி குடியிருப்பில் இருந்து மேற்கு பகுதி வழியாக டோல்கேட் வரை இரண்டு மினி பேருந்து சேவையை கொடியேற்று துவக்கி வைத்து மினி பேருந்தை ஒட்டிய மாமன்ற உறுப்பினர் இந்த நிகழ்ச்சியில் ஊர் தலைவர் உதயகுமார் செயளாலர் மோனி பொருளாளர் ஏழுமலை மற்றும் சீனிவாசன் கார்த்திக் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட மேற்கு பகுதி முருகப்பன் நகர் ஜோதி நகர் சத்தியமூர்த்தி நகர் கலைஞர் நகர் சார்லஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துக்காக பொதுமக்கள் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தான் பேருந்துகளில் பயணம் செல்வது வழக்கம்
இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக மினி பேருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில்
ஆறாவது வார்டு காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் எம் எஸ் திரவியம் கடந்த மூன்று வருடங்களாக மினி பேருந்து இந்த பகுதியில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில்
தற்போது தமிழக முதல்வர் இந்த பகுதியில் மினி பேருந்து இயக்குவதற்கான அறிவிப்பை அறிவித்த நிலையில் இன்று திருவொற்றியூர் காட்டு பொன்னியம்மன் நகர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மினி பேருந்து சேவையை சென்னை மாநகராட்சி ஆறாவது வார்டு மாமன்ற உறுப்பினர் திரவியம் கொடியசைத்து துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் பின்னர் அந்த நிதி பேருந்தை அவரே இயக்கிய நிலையில்
அந்த பகுதியை சேர்ந்த காட்டுப் பொன்னியம்மன் நகர் மற்றும் கலைஞர் நகர் சார்லஸ் நகர் பகுதி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி வாழ் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் கைத்தட்டியும் உற்சாகமாக வரவேற்றனர்
இதுவரை இந்த பகுதியில் இது போன்ற பேருந்து வசதிகள் இல்லாத நிலையில் தற்போது இந்த பகுதிக்கு புதியதாக இரண்டு பேருந்துகளை இயக்கியது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த பகுதியில் மினி பேருந்து இயக்குவதற்காக மூன்று வருடங்களாக போராடி வந்த நிலையில் தமிழக முதல்வர் இப்போது இந்த பகுதியில் மினி பேருந்து இயக்குவதற்கு அறிவுறுத்திய நிலையில் இந்தப் பகுதி மக்கள் பயன்படும் வகையில் தற்போது மினி பேருந்து இயக்கத்தை துவக்கி உள்ளதாகவும் பத்து ரூபாய் கட்டணத்தில் தினமும் காலை எட்டு மணி முதல் இந்த மினி பேருந்து எண்ணூர் சுனாமி குடியிருப்பில் இருந்து முருகப்ப நகர் ஜோதி நகர் சத்தியமூர்த்தி நகர் சார்லஸ் நகர் கலைஞர் நகர் பகுதியில் இயக்கப்படும் எனவும் இது இந்த பகுதியில் பொதுமக்கள் வரவேற்பதாகவும் ரயில்வே சுரங்கப்பாதை பணி மூன்று இடங்களில் நடைபெறுவதால் அதுவரை இந்த மினி பேருந்துகளில் பயணம் செய்யலாம் எனவும் மாமன்ற உறுப்பினர் தெரிவித்தார்