உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் திருக்கோவிலில் விழாவில் தென்னிந்திய வாணியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பங்கேற்பு.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தென் காளகஸ்தி என்று பக்தர்களால் அழைக்கப்படும் காளத்தீஸ்வரர் சமேத ஞானம்மன் திருக்கோவிலில் அடுத்த மாதம் மார்ச் 02..03.2026 திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது
இதனையொட்டி ஒவ்வொரு சமுதாயத்தார் சார்பில் மண்டகப்படி நடைபெற்று வருகிறது வாணியர் குல செட்டியார் சங்கம் சார்பில் நடைபெற்ற மண்டகப்படி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தென்னிந்திய வாணியர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ் சுந்தரவடிவேல் அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உத்தமபாளையம் வாணியர் சங்க தலைவர் பழனியப்பன் கம்பம் தெற்கு வட்ட வாணியர் சங்க தலைவர் ராஜா என்ற பாலசுப்பிரமணியன் செயலாளர் முருகன் பொருளாளர் பால்பாண்டி கம்பம் வடக்கு வட்ட வாணியர் சங்கத் தலைவர் எம் ஜெயபாலன் செயலாளர் எஸ் குணசேகரன் பொருளாளர் எம் முத்துப்பாண்டி தென்னிந்திய வாணியர் சங்க தேனி மாவட்ட தலைவர் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .