தேனி அல்லிநகரம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் சம்பளம் வழங்க வலியுறுத்தி அலுவலகம் முன்பு போராட்டம் தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி
தூய்மைபணியாளர்கள் சம்பளம் வழங்க வேண்டி நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதனைத் தொடர்ந்து தேனி நகராட்சி அலுவலகம் தொடங்கி ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று தங்களது போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கும் வகையில் சென்றனர் மேலும் இந்த போராட்டத்தில் மாதந்தோறும் அந்த மாத கடைசி வேலை நாளில் சம்பளம் பெறும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அறத்தோடு சிந்தித்து தூய்மை பணியாளர்களுக்கும் மாதந்தோறும் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரணியில் வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் ஆபீஸ் வரை 3 கிலோ மீட்டர் பேரணி நடத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு கூட எங்களை அழைக்கவில்லை என்று தூய்மை பணியாளர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்