தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ள சுயேட்சை வேட்பாளர் தொகுதி மக்களுக்கு மாதம் ஐயாயிரம. ரூபாய் மதிப்புள்ள மளிகை சாமான்கள் வழங்குவேன் என அதிரடி
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி,தொகுதி பங்கீடு என தேர்தல் வேலைகளில் பிசியாகி வருகின்றனர்..
இந்நிலையில் தமிழகத்தில் முக்கிய தொகுதியாக பார்க்கப்படும் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்க உள்ளதாக ஷாஜஹான் என்பவர் தெரிவித்துள்ளார்..
இது குறித்து ஷாஜஹான் கூறுகையில்,மக்களுக்கு குறிப்பாக தொண்டாமுத்தூர் தொகுதி மக்களுக்கு மாதம் ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை சாமான்கள் வழங்குவேன் என அவர் கூறினார்..
அ.தி.மு.க.வின் கோட்டை எனப்படும் கோவை மாவட்டத்தில் குறிப்பாக முன்னால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த தொகுதியிலேயே ஐயாயி்ரம் ரூபாய் மளிகை சாமான்கள் என சுயேட்சை வேட்பாளரின் அறிவிப்பு அனைத்து கட்சியினர் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது குறிப்பிடதக்கது..