பன்னாட்டு லயன்ஸ் 3242 சி மாவட்டத்தின் கீழ் இயங்கும் கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம் சார்பாக கல்வி,மருத்துவம், விளையாட்டுசார்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்..
இதன் ஒரு பகுதியாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பினருடன் இணைந்து நீலகிரி மாவட்டம்
பி. மணஹட்டி உதக மண்டல பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி பள்ளி மாணவர்களுக்கு டீ ஷர்ட் உள்ளிட்ட பரிசுகள் வழங்கும் விழா பள்ளியன் தலைமை ஆசிரியை லயன் வசந்தா தலைமையில் நடைபெற்றது..
நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பெயிரா கூட்டமைப்பின் தேசிய செயல் செயலாளர் ,பன்னாட்டு லயன்ஸ் சங்க மாவட்ட சேவை திட்ட தலைவர் செந்தில் குமார் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு டீ ஷர்ட் மற்றும் பரிசுகள் வழங்கினார்..
நிகழ்ச்சியில் நேரு நகர் லயன்ஸ் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் செயலாளர் பால்ராஜ் லயன்ஸ் கிளப் உதகமண்டலம் ராஜேஷ், வனிதா ராஜேஷ் மனோகரன்நேரு நகர் லயன்ஸ் சங்க செயலாளர்கள் தேஜஸ்வினி,திவ்யதர்ஷினி,பொருளாளர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்கள்..
நிகழ்ச்சியில்,பள்ளி ஆசிரியர்கள் ஜெயந்தி ,.லீலா ,கஸ்தூரி,சுஜித்,பிரீத்தா,ஜோதி,
சோஜிதா,பிரியங்கா உட்பட பலர் கலந்து கொண்டனர்…