திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டமும், கல்லூரி ஆர்.ஆர்.சி அமைப்பும், தெள்ளாறு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து நடத்திய இரத்ததான முகாம் நேற்று இராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரி தலைவர் கலைமாமணி, முனைவர் வி.முத்து கலந்துகொண்டு 50 ஆவது முறையாக இரத்த தானம் வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் கல்லூரி இயக்குனர்கள் எஸ். அப்பாண்டைராஜன், டிகேஜி ஆனந்த், பி.மணி, ர.அருள், தெள்ளாறு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஹித்தேன் டி ஷா, மருத்துவர் சீனுவாசன், குழந்தைகள் நல மருத்துவர் பிரசாந்த், கோதண்டராமன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேகர், கோபிநாதன், சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாமில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாட்டை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜெயப்பிரகாஷ், செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் மாடசாமி ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.