காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பென்னலூர் மற்றும் கடுவஞ்சேரி ஊராட்சிகளில் குடிநீர் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு ஹூண்டாய் கார் நிறுவனத்திற்கு புதிய நீர்தேக்க தொட்டிகள் அமைக்க ஊராட்சி மன்ற தலைவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது
அதன்படி ஹூண்டாய் நிறுவன சமூக பாதுகாப்பு நிதியில் இருந்து 1.60 கோடி மதிப்பீட்டில் இரு மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டது.
அந்த வகையில் பெண்ணலூர் ஊராட்சியில் 1.15 கோடி மதிப்பீட்டில் 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியும் கடுவஞ்சேரி ஊராட்சியில் 45 லட்சம் மதிப்பீட்டில் 30000 லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியும் கட்டிமுடிக்கப்பட்டது
இன்று ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தலைமையில் இரு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளும் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது
இந்நிகழ்வில் ஹூண்டாய் நிறுவன மேலாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் செந்தில்ராஜன், பரமசிவம், ஊராட்சி மன்ற தலைவர்கள் கல்பனா யுவராஜ், வசந்தா , சிவக்குமார், ஹரிகிருஷ்ணன்,ஹூண்டாய் நிறுவன அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.