திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட விருப்பாச்சிபுரம் என்ற இடத்தில் சப்இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது அந்த வழியாக வந்த மினிவேன் ஒன்றினை நிறுத்தி சோதனை செய்த போது அதில் எவ்வித அனுமதியும் இல்லாமல் அரை யூனிட் அளவில் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து மணலை கடத்தி வந்த வலங்கைமான் பாதிரி புரம் வடக்கு தெருவை சேர்ந்த அன்பு ஜயா ( 54) என்பவரை கைது செய்ததுடன் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிவேனையும் பறிமுதல் செய்தனர்.