கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் சிஎஸ்ஐ பிஷப் சாலமன் துரைசாமி கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்பாட்டுதற்கான எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் கல்லூரியில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. பேச்சுப்போட்டி ஓவியம், கட்டுரை போன்ற போட்டிகள் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியான விழிப்புணர்வு பேரணி .கல்லூரி முதல்வர் முனைவர் உமேஷ் சாமுவேல் தலைம தாங்கினார்சிறப்பு அழைப்பாளர் கரூர் நகர காவல் உதவி ஆய்வாளர் பத்மசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இவ்விழிப்புணர்வு பேரணி கல்லூரியில் தொடங்கி முக்கிய சாலையான கரூர் மாநகரப்பகுதியில் தலைமை தபால் நிலையம், ஜவகர் பஜார்,கரூர் பேருந்து நிலையம் தின்னப்பா தியேட்டர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வழியாக கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாய்கள் ஏந்தி துண்டு பிரச்சாரங்கள் வழங்கினர்.பின்னர் கல்லூரியில் பேரணி நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில் இறுதியாக தமிழ் துறை உதவி பேராசிரியர் மீனாட்சி சுந்தரம், போதை மருந்து எதிர்ப்பு கிளப் ஒருங்கிணைப்பாளர் நன்றி உரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர் ரமேஷ் , நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்.கணிதவியல் உதவி பேராசிரியர் முனைவர் லிவிங்ஸ்டன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.கல்லூரி மாணவ,மாணவிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.