தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் பஸ் நிலையம் அருகே நகரின் மையப் பகுதியான தேவர் சிலை ரவுண்டான அருகே 125 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

பழமையான கட்டிடம் என்பதால் கட்டிடம் மற்றும் சுகாதார வளாகம் கடுமையாக சேதமடைந்தது சிதிலமடைந்த நிலையில் உள்ளது இதனால் இங்கு வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மழைக் காலங்களில் பாதுகாக்க முடியாமலும் பத்திரம் பதிய வரும் பொது மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இந்த பழமையான கட்டிடத்தை இடித்து விட்டு புதிய அலுவலகம் கட்ட வேண்டும் என்று நகர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் இதனைத் தொடர்ந்து பழைய சார் பதிவாளர் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கெட்ட பொதுப்பணித்துறை மூலம் ரூபாய் 2.40 கோடி செலவில் 5330 சதுர அடியில் சார்பதிவாளர் அலுவலகம் கணினி உணவு அருந்தும் அறை சுகாதார வளாகம் இரண்டு மாடி மேல் தளம் ஆவண காப்பகம் ஆகிய வசதிகளுடன் கட்டுவதற்கான பூமி பூஜையை தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமை வகித்து பூமி பூஜையை செய்து கட்டிட பணிகளை துவக்கி வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சார்பதிவாளர் சசிகலா போடி சார் பதிவாளர் ஜெயப்பிரகாஷ் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் பொதுக்குழு உறுப்பினர் எம் சங்கர் நகராட்சி நகர் மன்ற கவுன்சிலர் மகேஷ் தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜா ரமேஷ் உள்ளிட்ட நகர திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *