தமிழ்நாடு கோயமுத்தூர் மாவட்ட நிர்வாகம், கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சார்பாக ஒவ்வொரு நான்காவது சனிக்கிழமையும் நெகிழி ஒழிப்பு மற்றும் நெகிழி சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது
அதன் அடிப்படையில் ஜூன் மாதத்திற்க்கான வழிபாட்டு தலங்களில் சுத்தம் செய்தல், மற்றும் பொது மக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு, மஞ்சள் துணி பைகள் பயன்படுத்திட விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியை,கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 48 வது வார்டு பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் மாமன்ற உறுப்பினர் பிரபா ரவீந்திரன் முன்னிலையில்,கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் தலைமையில்,கோவையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக, விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு பேரணி டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் துவங்கி முக்கிய இடங்களைக் கடந்து நடந்தது.
பொதுமக்களுக்கு மஞ்சள் துணிப்பைகள் (Cloth Bags) வழங்கப்பட்டன.
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இந்த மஞ்சப்பைகள் பயன்பாட்டிற்கு ஊக்கமளிக்கும் வகையில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது மேலும் புனித கிருஸ்தவ வழிபாடு தளமான our lady of Fathima church வளாகத்தில் உள்ள குப்பைகளை தூய்மை படுத்தும் பணியை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் SBM ZSO விஜயகுமார். மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், தன்னார்வலர் செல்வம் ஏஜென்சி லோகேஷ், முதல்வரின் பசுமை தோழர் ராகினி, AIM NGO திருநாவுக்கரசு, நவயுகம் NGO, கிருஷ்ணா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி மாணவ மாணவிகள், SBM பரப்புரையாளர்கள் மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள்,மாநகராட்சி அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.