காவல்துறை மற்றும் ஆர்எஸ்கே பள்ளி சார்பில்-துறையூரில் போதை பொருள் ஒழிப்புப் பேரணி
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் ஆர்எஸ்கே பள்ளி சார்பில் போதை ஒழிப்புப் பேரணி நடைபெற்றது.துறையூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே (RSK INTERNATIONAL SCHOOL, CBSE, ) மற்றும் துறையூர் காவல்துறை சார்பில் (28/06/2025) போதை பொருள் ஒழிப்புப் பேரணி நடைபெற்றது.இப்பேரணியை பாலக்கரையில் துறையூர் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் அப்துல்லா தொடங்கி வைத்தார்.
பேரணியில் மாணவர்கள் இளமைப்பருவத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும், போதைப்பழக்க வழக்கங்கள் பாவச் செயலாகும்,போதை பொருள் உபயோகிப்பதை தடுப்போம், போதைப் பொருளை ஒழிப்போம்,மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தி கோஷமிட்டவாறு பேரணியில் சென்றனர்.பேரணியில் சுமார் 300 பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
துறையூர் பாலக்கரையில் துவங்கிய இப்பேரணி திருச்சி ரோடு, பேருந்து நிலையம் வழியாக முசிறி பிரிவு ரோடு ரவுண்டானாவில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.பேரணியில் பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பள்ளி முதல்வர் ஆர்.பானுமதி மற்றும் துணை முதல்வர் லாரன்ஸ், ஒருங்கிணைப்பாளர்கள் கலைவாணன், கனகசபை, பள்ளி பேருந்து மேலாளர் பாலா மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் வடிவேலு ,சஞ்சீவி, போக்குவரத்து உதவி காவலர்கள் விக்னேஷ் முனீஸ்வரன் சரண்யா, பொன்னரசி ,எழிழரசி மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்