தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூரில் உள்ள தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கிட்டங்கியின் கீழ் பணி புரியும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் அங்கு பணி புரியும் ஒப்பந்த பணியாளர்களுக்கு நிரந்தர பணி செய்வதற்கான அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்
தொழிலாளர்களுக்கான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஒரு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்
மேலும் எங்களது கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற விட்டால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது இந்த போராட்டத்திற்கு தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் ஆண்டிபட்டி கிளை தலைவர் கணேசன் செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அங்கு பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தற்பொழுது முதல் முறையாக ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது