தூத்துக்குடியில் ஸ்மாா்ட் ரேஷன் காா்டு பொதுமக்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் வழங்கினாா்.
தூத்துக்குடி தாலூகாவிற்குட்பட்ட பகுதியில் புதிதாக குடியிருக்க வந்த பொதுமக்கள் மற்றும் திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் இருந்து வரும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் புதிய ரேஷன்காா்டு வேண்டி ஆதாரத்துடன் வட்டாட்சியர் குடிமைபொருள் வழங்கல் துறை அதிகாாிகளிடம் வழங்கியிருந்தனா்.
ஆய்விற்குபின் பெறப்பட்ட கோாிக்கை மனுக்களில் தூத்துக்குடி தாலூகாவிற்குட்பட்ட பொதுமக்களுக்கு ஸ்மாா்ட் ரேஷன்காா்டு வழங்கும் நிகழ்ச்சி டூவிபுரத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் புதிய ஸ்மாா்ட் ரேஷன்காா்டு பொதுமக்களுக்கு வழங்கி பணியை தொடங்கி வைத்தாா். அதனை தொடா்ந்து 573 போ் பெற்றுக்கொண்டு பயனடைந்தனா்.
நிகழ்ச்சியில் குடிமைபொருள் வழங்கல் தாசில்தாா் ஞான்ராஜ், மாநகர திமுக செயலாளா் ஆனந்தசேகரன், மாநில ெபாறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாவட்ட மகளிா் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அண்ணாத்துரை, கவுன்சிலர்கள் வைதேகி, சரவணக்குமாா், மாவட்ட பிரதிநிதி நாராயணன், வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, செந்தில்குமாா், அவைத்தலைவர் பொியசாமி, பகுதி துணைச்செயலாளர் ஜெயசிங், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், பகுதி தகவல் ெதாழில்நுட்ப அணி அமைப்பாளர் மாா்க்கிஸ்ட் ராபா்ட், சட்டமன்ற உறுப்பினர் அலுவலக பொறுப்பாளர் அற்புதராஜ், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனா்.