ஆங்கில எழுத்துக்களில் ஏ முதல் இசட் வரையில் 676 சொற்களை 18 நிமிடங்களில் கூறி ஆறு வயது சிறுமி ஆதனா லட்சுமி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்

கோவை இராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் பூர்ண சந்திர குப்தா மற்றும் கவிதா தம்பதியரின் மகள் ஆறு வயது சிறுமி ஆதனா லட்சுமி..

அதே பகுதியில் உள்ள மவுண்ட் கார்மல் நர்சரி பிரைமரி பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் சிறுமி ஆங்கில எழுத்துக்களில் ஏ முதல் இசட் வரையில் 26 எழுத்துக்களை முதல் எழுத்தாக கொண்ட பல்வேறு வாக்கியங்களை 18 நிமிடங்கள் 56 நொடிகளில் கூறி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்..

ஆங்கில எழுத்துக்களின் 26 எழுத்துக்களில் முதல் சொல்லாக பயன்படுத்தி பறவைகள்,மருத்துவ தாவரங்கள்,பூக்கள்,நிறங்கள்,காய்கறிகள் விலங்குகள்,இந்தியாவின் முக்கிய நகரங்கள் என 26 விதமான 676 படங்களை திரையில் காண்பிக்கும் போது தொடர்ந்து அவற்றை 18 நிமிடங்கள் 56 விநாடிகளில் கூறி அசத்தினார்..

ஆறு வயது சிறுமியின் இந்த அரிய திறமையை கண்ட சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிறுமி ஆதனா லட்சுமிக்கு கைகளை தட்டி உற்சாகபடுத்தினர்..
தொடர்ந்து சிறுமியின் சாதனை சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நிலையில்,அவருக்கு புத்தகத்தின் நிறுவனர் நிமிலன் நீலமேகம் மற்றும் கோவை மாவட்ட தலைவர் பாலமுரளி கிருஷ்ணன் ஆகியோர் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தனர்..

இந்நிகழ்ச்சியில் சோழன் உலக சாதனை புத்தகத்தின் பொதுச் செயலாளர் ஆர்த்திகா நிமிலன்,செயலாளர் திலகவதி மவுண்ட் கார்மல் பள்ளியின் சுஹிர்தா வனிதா உட்பட பலர் கலந்து கொண்டு சிறுமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *