திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம்:உப்பாறு அணைக்கு முழு கொள்ளளவு தண்ணீர் வழங்கக் கோரி கவன ஈர்ப்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் – 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு முழு கொள்ளளவு தண்ணீர் வழங்கக் கோரி கவன ஈர்ப்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் – 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு முழு கொள்ளளவான தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணையில் இன்று (திங்கட்கிழமை) மதியம் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மக்கள் மற்றும் விவசாயிகள் கூட்டாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், விவசாயி மற்றும் சமூக செயல்வீரரான வேலு சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர். அவர்கள் “உப்பாறு அணை வறண்ட நிலையில் உள்ளது; விவசாயம் செய்யத் தண்ணீர் இல்லை!”, “தண்ணீர் இல்லை என்றால் வாழ்வும் இல்லை!” எனக் கோஷமிட்டனர்.
போராட்டத்தின் போது பேசுகிறபோது, வேலு சிவக்குமார் கூறியதாவது:
“உப்பாறு அணைக்கு ஆண்டுதோறும் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் வழங்கப்படும். ஆனால், இந்தாண்டு முழு கொள்ளளவான தண்ணீர் இன்னும் விடப்படவில்லை. இது பெரும்பாலான விவசாயிகள் பாசன உற்பத்தியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நிலம் உலர்ந்துள்ளது, பயிர்கள் வாடி வருகிறது.
உப்பாறு அணை. திருமூர்த்தி அணையின் உபரி நீரை இங்கு சேமிக்கும் வகையில் அணை கட்டப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்னர் உபரி நீரால் பயன்பெற்று வந்த உப்பாறு அணைக்கு, பிஏபி திட்ட பாசன விரிவாக்கம் நடந்த பிறகு, உபரி நீரின் அளவு குறைந்தது அதோடு, அணைக்கு் மழைநீர் வரும் ஓடையில் பல இடங்களில் ஊராட்சி நிர்வாகங்களால் தடுப்பணைகள் கட்டப்பட்டதால் அணைக்கு வரக்கூடிய மழைநீரும் வராமல் போய்விட்டது. அணையின் நீராதாரங்கள் அழிக்கப்பட்டதால் உப்பாறு அணையால் பயனடைந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டன. இதனால்.நாங்கள் தொடர்ந்து நீர்வளத்துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் மனுவும் கொடுத்தோம். ஆனால் எதுவும் நடந்திருக்கவில்லை. இதனால், வழியின்றி இப்போராட்டத்தை நடத்துகிறோம்.”
போராட்டம் குறித்து தகவலறிந்த காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மூலம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்ட பிறகு, ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையை ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.
பேட்டி:திரு.வேலு சிவக்குமார்.
உப்பாறு பாசன ஒருங்கிணைப்பாளர்.