அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேட்டில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் மேல்மருவத்தூர் சின்னவர் அம்மா செந்தில்குமார் அவர்களின் திருக்கரங்களால் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
இதில் யாக பூஜைகளை தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி ராமேஸ்வரம், அழகர்கோவில், உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து மேல தாளம் முழங்க கும்பகலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில் சுற்று வட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.