வாட்டர் பெல் திட்டம்: சமூக அமைப்பினர் வாட்டர் பாட்டில்களை வழங்கினர்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக அரசு அறிவித்துள்ள வாட்டர் பெல் திட்டத்தை அமல்படுத்தும் விதமாக வந்தை முன்னேற்ற சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வாட்டர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் செந்தில் முருகன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் க.வாசு வரவேற்றார். ஆரியன் ஆப்டிகல் அப்துல் ரஹ்மான், சமூக ஆர்வலர் வி.விஜயகுமார், கலைஞர் முத்தமிழ் சங்க தலைவர் வந்தை குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக் ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுக்கு நீரின் அவசியத்தை வலியுறுத்தியும், நீர் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் இந்நிகழ்வில் மாணவர்கள் குடிநீர் பருகுவதற்காக வந்தை முன்னேற்ற சங்கம் சார்பில் தலைவர் வந்தை பிரேம் மற்றும் அவரது சகோதரர் வந்தை பிரகாஷ் ஆகியோர் வாட்டர் பாட்டில்களை வழங்கி கருத்துரைகளை வழங்கினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் அ.ஷாகுல் அமீது, மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், சத்துணவு பணியாளர்கள் பங்கேற்றனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியை ஈ.கோகிலா நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.