திருவாரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக்கழிவு மேலாண்மை செய்யும் வகையில் நான்கு நகராட்சிகள் ஏழு பேருராட்சிகளில் முத்தூட் பைனான்ஸ் சமூக பொறுப்பு திட்ட நிதியின் கீழ் பாலம் சேவை நிறுவனத்தின் ஏற்பாட்டில் பிளாஸ்டிக் பாட்டில் கழிவு சேகரிக்கும் கூண்டு வழங்கப்பட்டது
கூண்டினை மாவட்ட கலெக்டர் மோகனச் சந்திரன் திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் துர்காவிடம் வழங்கி துவக்கி வைத்து கூறுகையில் இது போன்ற சிறந்த பணிகள் தொடர்ந்து நடக்க வேண்டும் முத்தூட் நிதி நிறுவனத்திற்கு வாழ்த்துகள் என்றார் திட்டம் குறித்து முத்தூட் சமூக பொறுப்பு திட்ட மதுரை தென் மண்டல மேலாளர் ஜெயக்குமார் கூறும் போது உலக சுற்றுச்சூழல் தினம் 2025 ல் பிளாஸ்டிக் மேலாண்மை செய்யும் விதமாக 11-பிளாஸ்டிக் சேகரிப்பு கூண்டுகள் 1.25.000 மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது
முத்தூட் நிதி நிறுவனம் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது திருவாரூர் மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றார். நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் மாசுகட்டுபாடு வாரிய உதவி பொறியாளர் சுதர்சன் முத்தூட் தஞ்சாவூர் பிராந்திய மேலாளர் கோட்டைராஜன் பாலம் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
ஓ.என்.ஜி.சி சேவை ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் நடனம் நகர்மன்ற உறுப்பினர் வரதராஜன் முத்தூட் நிறுவன தஞ்சாவூர் மண்டல வர்த்தக மேலாளர் வினோத் பாதுகாப்பு அலுவலர் கேசவன் கிளை மேலாளர்கள் சீதளாதேவி லாவண்யா தண்டலை ஊராட்சி செயலர் தங்கதுரை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.