ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்க துறையூரில் காங்கிரஸ் சொத்து மீட்பு குழுவினர் ஆய்வு
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் காங்கிரஸ் சொத்து மீட்பு குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.துறையூரில் நகர தலைவர் ராமநாதன் ஏற்பாட்டில் காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான ஆலமரம் அருகில் உள்ள காமராஜர் படிப்பக கட்டிடம், சிவலிங்க விலாஸ் ஹோட்டல் சந்தில் உள்ள ஓட்டுவில்லை கட்டிடம் மற்றும் கொப்பம்பட்டி ஆகிய இடங்களை பார்வையிட்டு சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நிலங்களை மீட்பதற்காக முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே வி தங்கபாலு ,இணை செயலாளர் நிதின் கும்பல்கார், இணைத்தலைவர் எஸ் எஸ் ராம சுப்பு, மாநில பொதுச் செயலாளர் செல்வம், மாநில இணை செயலாளர் விச்சு என்கிற லெனின் பிரசாத் ஆகியோர் அடங்கிய சொத்து மீட்பு குழுவினர் துறையூரில் காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களையும் அதற்கான ஆவணங்களையும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் மாவட்ட தலைவர் கலைச்செல்வன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மோகனாம்பாள், கேபி ராஜா, சரவணன், பொருளாளர் இளையராஜா,நகரத் தலைவர் ராமநாதன், வட்டார தலைவர் மாணிக்கம், மாவட்ட செயலாளர் பாண்டியன், முன்னாள் நகர தலைவர் புகழேந்தி, மற்றும் சுதாகர், மணிகண்டன், அரவிந்தன், ரமேஷ் ,வாலீஸ்வரன், குமார் சௌந்தரராஜன், முகமது ரபிக், நாகராஜ் ,பெரியசாமி, கலியமூர்த்தி, டிவி கண்ணன், திருமுகம் உள்ளிட்ட காங்கிரஸ் கமிட்டியினர் உடன் இருந்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்