மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள திருமலாபுரம் திருமண மண்டபத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக மருத்துவரணி சார்பாக மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் மருத்துவர்கள் முருகையா சஞ்சீவி குமரே பாண்டியன் மாரியப்பன் சிவச்சந்திரன் மைக்கேல் ஜோசப் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி தேன்பத்தை ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி கனி கலந்து கொண்டனர்
இந்த மருத்துவ முகாமில் மருத்துவ பெண்கள் நோய் சிகிச்சைகள் சர்க்கரை நோய் பொது மருத்துவம் எலும்பு மருத்துவம் ஆகிய நோய்களுக்கு மருத்துவ சிகிச்சைகளும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் சிறப்பு மருத்துவர்களாக மருத்துவர் தமிழரசன் அன்பரசன் தமிழருவி கௌதமி தமிழரசன் அரவிந்த் மேனன் ஆகியோர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவம் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்
ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த சிகிச்சையை பயன்படுத்திச் சென்றனர் இந்நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர்கள் ரமேஷ் முகமது ஈசா முருகேசன் முருகன் திவான் ஒலி ஒன்றிய குழு உறுப்பினர் கலாநிதி உட்பட ஏராளமான திமுகவினரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.