ராமநாதபுரம் மாவட்டம், கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளி அளவிலான விளையாட்டு விழா நடைபெற்றது.இதில் 500 க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
பள்ளி நிர்வாக குழு செயலர் சங்கர் ஒலிம்பிக் தீபம் ஏற்றி விளையாட்டுப் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். விழாவில் க்ஷத்திரிய நாடார்உறவின் முறை முறைகாரர்கள்,அம்பலகாரர் மற்றும் பள்ளி நிர்வாக குழு தலைவர் சண்முகராஜ் பாண்டியன்,பொருளாளர் சரவணன்,உறுப்பினர்கள் குழந்தைராஜன், ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக தலைமையாசிரியை சிந்துமதி அனைவரையும் வரவேற்று பேசினார்.
மாணவிகள் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ,ஈட்டி எறிதல்,
100 மீ, 200மீ, 500 மீ, 1000 மீ ஓட்டப் போட்டிகள் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் பள்ளியின் செயலர் சங்கர் வழங்கினார். விழா முடிவில் உடற்கல்வி ஆசிரியை திருவளர்செல்வி நன்றியுரையாற்றினார்.