தென்காசி,
தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட அலுவலகம் வைகோ செயலகத்தில் வைத்து மாவட்ட அவைத்தலைவர் ந.வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக துணைச்செயலாளர் எஸ். கே.டி.துரைமுருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுரண்டை எஸ்.இராமகிருஷ்ணன் துவக்க உரை நிகழ்த்தினார். அவைத்தலைவர் தலைமையுரை யாற்றினார். தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம. உதயசூரியன் கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்க உரை நிகழ்த்தினார்.
இந்த கூட்டத்தில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு சம்பந்தமாக சாத்தூரில் நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவேண்டும் என்றும் செப்டம்பர் 15-ல் திருச்சி நகரில் எழுச்சியுடன் நடைபெற உள்ள அண்ணா பிறந்தநாள்விழா மாநாட்டிற்கு 20–வேன்களில் 500 பேர் சென்று கலந்து கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அடுத்து மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தென்காசி சுற்று சாலை பணியை விரைந்து முடித்து நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாவூர்சத்திரம் அருகில் காமராஜர் தினசரி சந்தை வழியாக ஆவுடையானூர் செல்லும் சாலையில் புதிதாக திறக்கப்பட உள்ள மதுபானகடைக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக்கூடாது என்றும் மீறி அனுமதி அளித்தால் மறியல் அறப்போரில் ஈடுபடுவது என்றும், தென்காசி மாவட்ட மக்களின் சென்னை செல்லும் இரயில் போக்குவரத்து வசதியை அதிகபடுத்த திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் தென்காசி வழியாக தாமிரபரணி துரித இரயிலை இயக்க இந்திய இரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
முன்பு பிரசித்தி பெற்ற இரயில் நிலையமாக விளங்கிய மேட்டூர் இரயில் நிலையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்த பகுதி மக்களுக்கு இரயில் சேவை கிடைக்கும் விதத்தில் ஈரோடு செல்லும் இரயிலை இங்கு நின்று செல்ல தென்னக இரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திருநெல்வேலி -தென்காசி சாலை விரிவாக்க பணியை விரைந்து முடித்து சீரான போக்குவரத்து நடைபெற அரசு கவனம் செலுத்த வேண்டியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சம்பந்தமாக நீதிமன்றம் வழங்கி உள்ள தடை ஆணையை விலக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மதிமுக பொதுக்குழு உறுப்பினர் ஏ.டி..நடராஜன் மாவட்ட துணைச் செயலாளர்கள் சுரண்டை எஸ்.கே.டி துரைமுருகன், ஆலங்குளம் வெ.மருதச்சாமி பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.ரெங்கசாமி, எவர்கிரீன் வே.பா.தங்கம், ஒன்றிய செயலாளர்கள் கீழப்பாவூர் வடக்கு பே.ஆறுமுகச்சாமி, ஆலங்குளம் தெற்கு அ.அருள்ராஜ், கடையம் தெற்கு மீ.சுந்தரம், நகர செயலாளர்கள் சுரண்டை பொன் மகேஷ்வரன், தென்காசி கு.கார்த்திக், மாவட்ட மகளீர்அணி தேனம்மாள் கோபால், மேலகரம் பேரூர் செயலாளர் வெங்கடாசலம், ஆலங்குளம் பேரூர் பொறுப்பாளர் கண்ணன், சுரண்டை முருகன், மாணிக்கம் மாவட்ட பிரதிநிதி திவான் மைதீன், தென்காசி மாவட்ட பிரதிநிதி நடராஜன், சென்னெல்தாபுதுக்குளம் ஒன்றிய பிரதிநிதி அண்ணாதுரை, தி.மகுதம்பாள், தென்காசி முத்துராஜா, மகேஷ் மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் தென்காசி நகர மதிமுக செயலாளர் கு.கார்த்திக் அனைவருக்கும் நன்றி கூறினார்.