சத்தியமங்கலம் ஜூலை 7
ஈரோடு மாவட்ட ஒக்கலிக கவுடர் சமுதாய சங்கம் சார்பில் சத்தியமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் மாமன்னர் கெம்பே கவுடா ஜெயந்தி விழா மாவட்ட தலைவர் வேலுமணி தலைமையில் மாநிலத் தலைவர் வெள்ளிங்கிரி முன்னிலையில் விஜயலட்சுமி அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
இதில் 250க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய,நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.