“தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஸ்ரீ அய்யங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி மங்கள இசை, கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.
இதில் வேதமந்திரங்கள் முழங்க, யாக பூஜை நடைபெற்றன. இதனை தொடர்ந்து கலசத்தை குருக்கள் தலை மீது சுமந்தபடி மேள தாளங்கள் முழங்க கோவிலை வலம் வந்து கோபுர கலசத்திற்கு எடுத்துச்சென்றனர்.
சிவாச்சாரியார்,குருக்கள்,ஆலய திருப்பணி குழுவினர்கள் கலந்து கொண்டு கலசத்தின் மேல் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். பின்னர் கோவில் சன்னதியில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்யப்பட்டு, அய்யங்காளியம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றன.
விழாவில் ஆலய நிர்வாகி இராமலிங்க குடும்பத்தினர், அனைத்து கட்சி நிர்வாகிகள், திருப்பணி செய்த ஸ்தபதியார்கள் கார்த்திகேயன்,விஜயன் மற்றும் ஆலய திருப்பணி குழுவினர்கள் கலந்து கொண்டார். சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.