தேனி மாவட்டம் கம்பம் விஸ்வகர்ம மகாஜன தலைமை சங்கத்தின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் க்ரைடன் தமிழ் சங்கத்தின் சார்பாக, மனிதநேய விருது பெற்ற பி. எல். எ ஜெகநாத் மித்ரா அவர்களுக்கு விஸ்வகர்மா மகாஜன சங்கத்தின் சார்பாக பாராட்டு விழாவும் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தலைவர் எஸ் கே வி சொக்கராஜா,செயலாளர்கள் ஆர் கண்ணன், டி எஸ் ஏ அருண், பொருளாளர் வீ. சென்ராயர் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.