திண்டுக்கல் நகர் புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் இனைந்து வழங்கும் நிகழ்ச்சியில் +2 பிறகு என்ன படிக்கலாம் ?,எங்கு படிக்கலாம் ? என்ன வேலைக்கு செல்லலாம் என்ற தலைப்பில் கல்வி மற்றும் வாழ்க்கைக்கு வழி காட்டுதலுக்கான நிகழ்ச்சி பள்ளியின் பவள விழா அரங்கில் நடைபெற்றது.
இதில் பள்ளியின் தாளாளர் அருட்பணி.மரியநாதன் சே.ச தலைமையிலான இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட் பணி.ஸ்டீபன் லூர்து பிரகாசம் சே.ச மற்றும் திண்டுக்கல் ரோட்டரி கிளப்பின் தலைவர் Rtn.மகேந்திரன்,செயலர் Rtn.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் என்றும் வெற்றி எதிலும் வெற்றியை எளிமையாக கையாலும் விதமாக பயிற்சியாளர் Rtn.டென்சிங் மாணவர்களிடம் வெற்றிகான வழிகாட்டுதலுடன் நடைமுறை பயிற்சியினை அளித்தார்.
மேலும் இறைவணக்கத்தினை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்.மரிய லூயிஸ் சேகர். வரவேற்புரை ஆசிரியர்.அமல்ராஜ்.வாழ்த்துரை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியின் தாளாளர் ஆசியுடன்,கருத்தாளர் உரையுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.