வடசென்னையில் வாழும் திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் தாலுக்கா நாடார்கள் ஐக்கிய சங்கம் சார்பில் காமராஜர் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு 23ஆம் ஆண்டு ரத்த தான முகாம் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள சங்க திருமண மாளிகையில் நடைபெற்றது.
விழாவிற்கு தலைவர் ஆர். பி. மனோகரன் தலைமை தாங்கினார், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் ஏ. நாராயணன் ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் டி. பி. டி. சத்ய குமார். கலந்து கொண்டார். பொதுச் செயலாளர் எஸ்.குமரேசன், பொருளாளர் ஏ
முருகையன், இணைச் செயலாளர் ஏ. ஆர். டி சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் வடசென்னை பகுதிகளில் இருந்து 260பேர் ரத்ததானம் செய்தனர்,
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் தலைமையில் மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர்.ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ரத்த தானம் வழங்கியவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்து முதல் பரிசு 2 கிராம் தங்க நாணயம் இரண்டாவது பரிசு ஒரு கிராம் தங்க நாணயம் மூன்றாவது பரிசு 1/2 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது
மேலும் ஏழு பேருக்கு ஆறுதல் பரிசாக 7பேருக்கு டிராவல் பேக் வழங்கப்பட்டது. முகாமில் துணைத் தலைவர்கள். பேச்சிமுத்து, சக்திவேல், ஜெயபால்,ஜெயகோபால், கனகராஜ் துணைச் செயலாளர்கள் உதயகுமார், ராஜசேகரன், முத்துப்பாண்டியன், குமாரவேல், தனபால், தொண்டன் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்