கருப்பூர் மாவடி கருப்பண்ணசாமி-கும்பாபிஷேகம் விழா

திருவையாறு அருகே, கருப்பூர் மாவடி கருப்பண்ணசாமி, ஐய்யனார் ,மதுரை வீரன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

திருவையாறு அருகே, கருப்பூர் பகுதியில் சித்தி விநாயகர்,மாவடி கருப்பண்ணசாமி, ஐய்யனார் மதுரை வீரன் சுவாமி ஆலய கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, ஆலயம் அருகே யாக குண்டங்கள் அமைத்து, காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தத்திற்கு நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கலசத்திற்கு துாப தீபங்கள் காண்பிக்கப்பட்ட பிறகு, மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீரை தலையில் சுமந்து, கோவிலை சுற்றி வலம் வந்த பிறகு கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை விமர்சையாக நடத்தினர். தொடர்ந்து மூலவருக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது.

பின் மாவடி கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்ற பின், பொதுமக்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. கருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கோயில் அறங்காவலர் இராமதாஸ் ,துணைத் தலைவர் இளையராஜா ஆகியோர் கூறியதாவது: கோவில் திருப்பணிக்கு நிதி உதவி செய்த இந்து சமய அறநிலையத் துறைக்கும் பரிந்துரை செய்த திருவையாறு சட்டமன்ற உறுப்பினர்
துரை. சந்திரசேகரன்,தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, தெற்கு ஒன்றிய செயலாளர் கௌதமன் ஆகியோருக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *