பேரிச்சை பழம் 1 கிலோ 250 ரூபாயில் இருந்து 300 ரூபாய் வரை மொத்த வியாபாரிகள் தனது பேரிச்சை பண்ணைக்கே வந்து வாங்கி செல்கிறார்கள்.
3 வருடங்கள் சோதனை செய்து வளர்க்கபடும் செடிகளை தனது தோட்டத்தில் வளர்த்து கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்

தருமபுரி,

ஈராக், சவுதிஅரேபியா போன்ற பாலைவன நாடுகளில் மட்டுமே பயிரிடப்படும் பேரிச்சையை தருமபுரி மாவட்டத்தில் அரியகுளம் கிராமத்தில் நிஜாமுதீன் என்ற விவசாயி பயிரிட்டு கடும் வறட்சியிலும் அமோக விளைச்சலை பெற்றுள்ளது.

சவுதிஅரேபியாவில் பேரிச்சை பண்ணையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த இவர் பாலைவன நாடுகளில் பயிராகும் இந்த பேரிச்சை விவசாயத்தை ஏன் தனது சொந்த கிராமத்தில் செய்யக்கூடாது என்ற நிலையில் சோதனை அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து பேரிச்சை கன்றுகளை இறக்குமதி செய்து தனது நிலத்தில் பயிரிட்டார்.

சில ஆண்டுகளிலேயே நல்ல விளைச்சலை தந்த இந்த பயிரை தொடர்ந்து தனது நிலத்தில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்து வருகிறார்.

இவரது நிலத்தில் பர்ரி, மஸ்தூர், அம்மர் உள்ளிட்ட 32 வகையாக பேரிச்சை செடிகளை தற்போது பயிரிட்டுள்ளார்.

அதில் பர்ரி என்ற திசு வளர்ப்பு செடி தருமபுரியின் கடும் வறட்சியையும் கடந்து நல்ல விளைச்சலை தந்துள்ளது. இதுகுறித்து விவசாயி நிஜாமுதீன் கூறும் போது பேரிச்சை விவசாயம் விவசாயிகளுக்கு ஒரு நல்ல வரப்பிரசாதமாகும்.

இதை பயிரிட்டால் 3 ஆண்டுகளில் நல்ல மகசூலை பெருவதோடு விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும். பேரிச்சை விவசாயத்திற்கு வேலையாட்கள், தண்ணீர் பிரச்சணையோ இல்லாத ஒரு பணப்பயிராகும்.

பேரிச்சை பழம் 1 கிலோ 250 ரூபாயில் இருந்து 300 ரூபாய் வரை மொத்த வியாபாரிகள் தனது பேரிச்சை பண்ணைக்கே வந்து வாங்கி செல்வதாகவும், ஒரு கிலோ 50 ரூபாய்க்கு கொடு த்தாலே விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றும், இந்த மரங்கள் 90 வருடங்கள் வரை காய்க்கும் தன்மை கொண்டது என்றும் கூறினார். மற்ற விவசாயிகளும் பேரிச்சை சாகுபடி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் வெளிநாடுகளில் ஆய்வு கூடங்களில் சுமார் 3 வருடங்கள் சோதனை செய்து வளர்க்கபடும் செடிகளை தனது தோட்டத்தில் வளர்த்து கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்.

இன்றைய கால சூழ்நிலையில் கடும் வறட்சியின் காரணமாக விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விவசாயம் செய்ய இயலாமல் பிழைப்பு தேடி அண்டை மாநிலங்களுக்கு செல்லும் இந்த சூழ்நிலையில் விவசாயி களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் பேரிச்சை சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்கபடுத்தும் வகையில் தமிழக அரசு மானியத்தை அதிகபடுத்தி விவ சாயிகளின் வாழ்வாதாரம் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *