கல்லூரணியில் காமராஜர்சிலையை பாராளமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்துவைத்தார் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதிக்குட்பட்ட கல்லூரணி கிராமத்திலுள்ள எஸ்.பி.கே. மேல்நிலைப் பள்ளியில், கல்வியே சமுதாயத்தின் விடுதலை எனும் முழக்கத்தினை முன்வைத்து, அனைவரும் கல்வி கற்பதற்கான வலுவான அடித்தளத்தை அமைத்த “கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர்” அவர்களின் முழு உருவ வெண்கலச்சிலையை பிறந்தநாளான்று தினத்தில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் . கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார். தமிழகநிதியமைச்சர் தங்கம்தென்னரசு தலைமைவகித்தார்
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் . நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், தமிழ் புலிகள் இயக்கத்தின் தலைவர் . நாகை திருவள்ளுவன், சிவகாசி மாநகராட்சியின் மேயர் சங்கீதா இன்பம், ஒன்றிய செயலாளர்கள் . பொன்னுத்தம்பி, . சந்தனபாண்டி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.விழாவிற்கான ஏற்பாடுகளை உறவின்முறை தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நிர்வாகிகள் செய்துஇருந்தனர் எம்.ரெட்டியபட்டி காவல்நிலைய காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்