மாநகராட்சி கண்டித்து தமிழக வெற்றி கழகம் திடீர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட இன்னாச்சியார்புரம் நான்கு மூக்கு ஜங்ஷனில் தொடர் விபத்து நடைபெற்று வந்தது இதனை அடுத்து மாநகராட்சி சார்பில் விபத்தை தடுக்கும் வகையில் ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது
இங்கு அமைக்கப்படுகின்ற ரவுண்டானா பெரிய அளவில் இருப்பதால் வாகனங்கள் செல்ல சிரமப்படுவதால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது இதனை அடுத்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திடீரென்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளருக்கு கிஷோர் தலைமை தாங்கினார் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் மாவட்ட துணைச் செயலாளர் கோல்டன் இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் ராகவேந்திரா நாடார் பேரவையின் சார்பில் வக்கீல் கார்த்திகேஷன் ஏசி துறை மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அஸ்வின் சந்தனராஜ் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் கூறுகையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இந்தப் பகுதியில் தொடர்பு ஏற்பட்டு வருவதால் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தோம் அதன் அடிப்படையில் மாநகராட்சி சார்பில் ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது
ஆனால் அது நான்கு மூக்கு ஜங்ஷன் என்பதால் ரவுண்டானா பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது
ஆகையால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இங்கு அமைக்கப்படுகின்ற ரவுண்டானா சிறிய அளவில் அமைக்க வேண்டும் இல்லை என்றால் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் கூறினார்