துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் நாடார் உறவின்முறை சார்பில் தலைவர் ஆதித்யன் ராஜன் தலைமையில் கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
தனை தொடர்ந்து பாலக்கரையில் இருந்து பாலக்காட்டு மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள காமராஜரின் நினைவகம் வரை பேரணியாக சென்று காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி அன்னதானம் மற்றும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இதில் துறையூர் நாடார் உறவின் முறை துணைத் தலைவர் மனோகர், கௌரவத் தலைவர் சுரேஷ், துணை தலைவர் பாண்டியன், செயலாளர் ரவி, துணை செயலாளர்கள் இளவரசன், ஆனந்த், இளைஞர் அணி மாடகவி ராஜா மற்றும் துறையூர் நாடார் உறவின்முறை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.துறையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்