துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது இதில் வட்டாரத் தலைவர் ஆர்.முருகையா தலைமையில் அம்மா உணவகம் அருகில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணசாமி, செயலாளர் சண்முகம், இளைஞரணி ஆர் கண்ணன், விவசாய அணி தலைவர் திரிசங்கு, வட்டார பொதுச் செயலாளர் ஆர் ராமையா, மகளிர் அணி செயலாளர் அமுதா, காளிப்பட்டி சுப்பிரமணியன், வட்டார துணை தலைவர் பெருமாள், புத்தூர் விஜயகுமார் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்