கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:-
அரியலூரில் நடந்தது தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் மறியல் போராட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்தது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் பெருவாரியான தொடக்ககல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வினை பாதிக்கும் அரசு ஆணை எண் 243 திரும்ப பெற வலியுறுத்தியும் கடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தியும் என்பன போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி இந்த மறியல் போராட்டம் நடந்தது
தமிழக ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆகியவைகள் இணைந்து இந்த மறியல் போராட்டம் நடந்தது மாநில ஒருங்கிணைப்பாளர் துரை சுந்தரமூர்த்தி மறியல் போராட்டத்திற்கு தலைமை வகித்து கைதனார்
மாவட்ட ஆசிரியர் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் கருணாநிதி முன்னிலை வகித்தார் இணைப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் எழில் இணைப்பு சங்க மாநில துணைத்தலைவர் வேல்மணி இணைப்பு சங்கம் தெய்வகுமார் ஆசிரியர் மன்றம் மாவட்ட செயலாளர் கலியராஜ் வட்டார ஒருங்கிணைப்பாளர் சிவராமன் உட்பட 600க்கும் மேற்பட்டோர் அரியலூரில் கைதானார்கள் மறியல் போராட்டம் நடைபெறுவதை ஒட்டி அரியலூரில் ஏராளமான போலீசார்கள் குவிக்கப்பட்டிருந்தனர்