கோவை

கரவழிமாதபூர் அரசூரில் அங்கன்வாடி மற்றும் சமுதாய நலக்கூடம் புனரமைப்பு

சூலூர் அருகே கரவழி மாதப்பூர் ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் மற்றும் அரசூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிழக்கு அரசு மற்றும் மேற்கு அரசூர் பகுதிகளில் அங்கன்வாடி கட்டிடங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தனியார் வாட்டர் டெக் நிறுவன சிஎஸ்ஆர் நிதியிலிருந்து 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டித்தரப்பட்டது.

சூலூர் அருகே வாட்டர் டெக்  நிறுவனத்தின் சார்பில் சமுதாய நலக்கூடம் கட்டித்தரப்பட்டது. அரசூர் ஊராட்சியில் கிழக்கு அரசூர் மற்றும் மேற்கு அரசூர் பகுதிகளில் அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டித்தரப்பட்டது.

இந்த திட்டத்தை கம்யூனிட்டிரி தனியார் தொண்டு நிறுவனம்  வாட்டர் டெக் நிறுவனத்தின் சி எஸ் ஆர்  நிதியுதவியுடன் மேற்கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் வாட்டர் டேங்க் நிறுவனத்தின் நிர்வாக செயல் தலைவர்மேத்யூ ஜாப்,மனித வளமேம்பாட்டு துறை தலைவர் லயனல் பால்,கம்யூனிட்டிரி தலைவர் ஹபீஸ் உள்ளிட்டர் கலந்து கொண்டனர். சூலூர் வட்டாட்சியர் சரண்யா கரவழி மாதப்பூரில் சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தார்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, அங்கன்வாடிகளில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.60 லட்சமாக மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த முயற்சி, பகுதி மக்களின் கல்வி மற்றும் சமுதாய நலனை மேம்படுத்துவதற்கு பெரும் பங்காற்றும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *