தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் அருகே தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள், 7 கோழிகள் இறந்து
திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாரப்பகவுண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கார்த்திகேயன். இவர் தனது தோட்டத்தில் 10 வெள்ளாடுகள் மற்றும் பல்வேறு வகை கோழிகளை வளர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று அவர் தனது ஆடு மற்றும் கோழிகளை மேய்ச்லுக்காக தனது தோட்டத்தில் விட்டுள்ளார். அப்போது அங்கு வந்த 5 தெரு நாய்கள் ஆடுகள் மற்றும் கோழிகளை துரத்தி துரத்தி கடித்துள்ளன.சத்தம் கேட்டு கார்த்திகேயன் அங்கு ஓடி சென்று பார்த்துள்ளார்.
அப்போது நாய்கள் கடித்ததில் அங்கு 6 ஆடுகள்,2 சேவல்கள் மற்றும் 5 நாட்டுக்கோழிகள் இறந்து கிடந்தன.அவற்றின் மதிப்பு ரூ.1லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. உடனே இதுகுறித்து கார்த்திகேயன் வி.ஏ.ஓ,கால்நடை மருத்துவர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.அப்போது இறந்த கால்நடைகளும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.குண்டடம் பகுதியில் அடிக்கடி இதுபோன்று நடைபெறும் சம்பவங்களால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கூறினர்.