துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றியம் திருமானூர் பேருந்து நிலையம் அருகில் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் 102வது பிறந்தநாள் விழா மற்றும் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் எம்எல்ஏ ஸ்டாலின் குமார்,மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன், தொகுதி பொறுப்பாளர் தங்க கமல், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.ஆர்.கே.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அருண் வரவேற்புரை ஆற்றினார்.
பேச்சாளர்கள் துரைப்பாண்டியன், ஆனந்தகுமார், சேக் அலிமாஸ் அலி ஆகியோர் திராவிட மாடல் ஆட்சியில் மகளிர் உரிமை தொகை, மகளிர் கட்டணமில்லா பேருந்து, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் பற்றி விளக்கி உரையாற்றினர். மீண்டும் தமிழகத்தில் மு க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைய “ஓரணியில் தமிழ்நாடு”அதிக உறுப்பினர்களை சேர்த்து வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று பேசினர்.
இதில் நகர செயலாளர் மெடிக்கல் முரளி,ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, சிவ சரவணன், பொது குழு கிட்டப்பா, இலக்கிய பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம்,சுற்று சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் அம்மன் பாபு, மாணவரணி துணை அமைப்பாளர் தி.அகத்தீஸ்வரன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், மாவட்ட பிரதிநிதி குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கீரம்பூர் முத்துதுரை, மகளிர் அணி கிருபா, மாவட்ட ஆதிதிராவிடர் அணி மணிவண்ணன், அன்பழகன் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி நிறைவில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டுடியோ சசிகுமார் நன்றி உரையாற்றினார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்