கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில் தமிழ் மாதத்தின் ஆடி திருநாளில் முதல் வெள்ளிக்கிழமையான சுயம்புவாக எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீ கெளமாரியம்மன் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதலே ஆண் பெண் ஆன்மீக பக்தர்கள் ஏராளமானோர் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்து அம்மன் அருள் பெற்று சென்றனர்
ஆடி வெள்ளி என்பதால் நடை சாத்தப்படாமல் காலை முதலே தொடர்ந்து அம்மனை பக்தர்கள் தரிசித்து செல்ல சிறப்பு ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்